/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'தமிழ் செம்மல்' விருதுஎம்.பி., பாராட்டு
/
'தமிழ் செம்மல்' விருதுஎம்.பி., பாராட்டு
ADDED : ஏப் 06, 2025 01:05 AM
'தமிழ் செம்மல்' விருதுஎம்.பி., பாராட்டு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா, பொத்தனுாரை சேர்ந்த கமலமணி என்ற பெண், 'மலையிடை பிறவாமணி', 'காற்றின் மொழி', 'கமலா சிவம் கவிதைகள்', 'தையலை உயர்வு செய்', 'ஆடிப்பெருக்கு', 'சிவக்க மறந்த அந்திவானம்' மற்றும் 'எப்போது வருவாய்' உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ளார். அவர் ஆற்றிவரும் தமிழ்த்தொண்டை பெருமைப்படுத்தும் வகையில், அவருக்கு, 2023ம் ஆண்டிற்கான, தமிழ்ச்செம்மல் விருது மற்றும் 25,000 காசோலையை வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்துள்ளது.
தொடர்ந்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், 'தமிழ்ச்செம்மல்' விருதுபெற்ற கமலமணிக்கு, பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
கலெக்டர் உமா, எம்.பி., மாதேஸ்வரன், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

