/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீ விபத்தில் பாதித்தகுடும்பத்துக்கு நிதியுதவி
/
தீ விபத்தில் பாதித்தகுடும்பத்துக்கு நிதியுதவி
ADDED : ஏப் 06, 2025 01:08 AM
தீ விபத்தில் பாதித்தகுடும்பத்துக்கு நிதியுதவி
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையத்தில், திருச்செங்கோடு சாலை, முனியப்பன் நகரில் வசிப்பவர் தேவராஜ், 45; தறி தொழிலாளி. கடந்த, 2ல் தேவராஜன் மனைவி கவிதா, சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, சிலிண்டரில் காஸ் கசிந்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், வீட்டிலிருந்த மிக்ஸி, கிரைண்டர், எலக்ட்ரானிக் பொருட்கள், பாத்திரங்கள், துணிகள் என, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து வீணாகின.
இந்நிலையில், நேற்று, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, தீவிபத்தில் பாதிக்கப்பட்ட தேவராஜை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினார்.
பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., செயலாளர் வெள்ளிங்கிரி, நகர பேரவை செயலாளர் சுப்ரமணி, மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சிவகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

