/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொகை அதிகம்: ஏலத்தைபுறக்கணித்த வியாபாரிகள்
/
தொகை அதிகம்: ஏலத்தைபுறக்கணித்த வியாபாரிகள்
ADDED : ஏப் 08, 2025 02:06 AM
தொகை அதிகம்: ஏலத்தைபுறக்கணித்த வியாபாரிகள்
சேந்தமங்கலம்:காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., வாரச்சந்தை கடைகளுக்கு நடந்த ஏலத்தொகை அதிகமாக நிர்ணயம் செய்ததால் வியாபாரிகள் ஏலம் எடுக்காமல் சென்றனர்.
சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்.,ல் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இந்த சந்தையில் இடப்பற்றாக்குறையாக உள்ளதால், சந்தை அருகே, 1.50 கோடி ரூபாய் செலவில், 32 காய்கறி கடைகளும், 14 பொதுவான கடைகளும் கட்டப்பட்டன.
இந்த கடைகளுக்கான ஏலம், காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., செயல் அலுவலர் ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில், வெளிப்புறத்தில் உள்ள பொதுவான, 14 கடைகளுக்கு மாத வாடகை, 4,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, முன்வைப்பு தொகை, 20,000 ரூபாய் என, தெரிவிக்கப்பட்டது. இதேபோல், காய்கறி கடைகளுக்கான வரி வசூல் செய்ய, ஏலத்தொகை, 4 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஏலத்தில் கலந்துகொண்டவர்கள், தொகை அதிகமாக இருப்பதாக கூறி ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை. இதனால், ஏலம் ரத்து செய்யப்பட்டது.