கவர்னருக்கு எதிராக தீர்ப்புதி.மு.க.,வினர் கொண்டாட்டம்
கவர்னருக்கு எதிராக தீர்ப்புதி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ADDED : ஏப் 09, 2025 01:43 AM
கவர்னருக்கு எதிராக தீர்ப்புதி.மு.க.,வினர் கொண்டாட்டம்
நாமக்கல்:தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், பல்கலையில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில், கவர்னரின் தலையீடு அதிகரிப்பதாகவும், தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், நேற்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதில், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் முடிவும் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் முடிவை, கவர்னர் ஒரு மாதத்தில் எடுக்க வேண்டும்.
அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக அந்த மசோதாவை திருப்பி அனுப்பும் பட்சத்தில், அந்த முடிவை, மூன்று மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என, கவர்னருக்க காலக்கெடுவை நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பை வரவேற்கும் வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.முக., சார்பில், பரமத்தி வேலுார் சாலை, செலம்ப கவுண்டர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாடினர்.
