முத்தாயம்மாள் இன்ஜினியரிங்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
முத்தாயம்மாள் இன்ஜினியரிங்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 09, 2025 01:48 AM
முத்தாயம்மாள் இன்ஜினியரிங்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ராசிபுரம்:ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. சென்னை அசோக் லைலேண்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் பேட்ரிக் ரஞ்சித்குமார், மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார். அப்போது, ''மாணவர்கள் தங்களது துறை சார்ந்த அறிவையும், திறமைகளையும் தினமும் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். வருங்காலத்தில் சமூக மேம்பாட்டிற்காக என்ன செய்யப்போகிறோம் என்பதை முடிவு செய்து, அதற்கான குறிக்கோளை உருவாக்க வேண்டும். ஒரு செயலை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி மனமுவந்து செய்யும்போது அந்த செயல் நிச்சயம் வெற்றியை கொடுக்கும்,'' என்றார்.
முத்தாயம்மாள் எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் தாளாளர் கந்தசாமி, டிரஸ்டி அம்மணி கந்தசாமி, செயலாளர் குணசேகரன், இணை செயலாளர் ராகுல் ஆகியோர், மாணவ, மாணவியரை பாராட்டினர். கல்லுாரி முதல்வர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். வேணுகோபால் வரவேற்றார். தொடர்ந்து, சுதந்திர வனிதா, பட்டமளிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
