sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

/

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்


ADDED : ஏப் 10, 2025 01:25 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

ப.வேலுார்:'கோடைகாலம் துவங்கியுள்ளதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இதில் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய, 3,488 குடிநீர் இணைப்புகள் உள்ளன. சுல்தான்பேட்டை, நல்லியம்பாளையம், சக்தி நகர், சந்தை ரோடு, குப்புச்சிபாளையம், பொய்யேரி மற்றும் ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இரண்டு நாளைக்கு ஒருமுறை, இரண்டு மணி நேரம் தண்ணீர் சீராக கொடுக்கப்பட்டு வருகிறது.

ப.வேலுார் காவிரி ஆற்றில் இருந்து அனிச்சம்பாளையம், தவிட்டுப்பாளையம், பொத்தனுார் ஆகிய பகுதிகளில் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில் கிணறு அமைத்து பம்பிங் செய்யப்பட்டு பொத்தனுாரில் மிகப்பெரிய அளவில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் தேக்கி மீண்டும் பம்பிங் மூலம் ப.வேலுார் முழுக்க குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

தற்போது, குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும். மேலும், மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us