/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருணைக்கொலை செய்யக்கோரிகவுரவ விரிவுரையாளர்கள் மனு
/
கருணைக்கொலை செய்யக்கோரிகவுரவ விரிவுரையாளர்கள் மனு
ADDED : ஏப் 11, 2025 01:14 AM
கருணைக்கொலை செய்யக்கோரிகவுரவ விரிவுரையாளர்கள் மனு
ஆத்துார்:தமிழகத்தில், 164 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள், 7 கல்வியியல் என, 171 கல்லுாரிகள் உள்ளன. அதில், 7,324 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். அதில், 10 சங்கங்களை சேர்ந்த, கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, காலமுறை ஊதியம் உள்பட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆட்சி மன்ற குழு சார்பில், நேற்று தமிழக அரசுக்கு அனுப்பிய மனு:
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், 25 ஆண்டுக்கு மேலாக கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை, கொத்தடிமை போன்று அரசு மற்றும் உயர்கல்வித்துறை, தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. பல போராட்டங்கள் நடத்தியதில் மன உளைச்சல் தான் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் தொடர்பாக, கவுரவ விரிவுரையாளர்கள் நீதிமன்ற தீர்ப்பு பெற்றபோதும், அந்த உத்தரவையும் புறக்கணித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில், பணி நிரந்தரம் செய்வதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதும், ஆட்சிக்கு வந்த பின் காற்றில் பறக்கவிடுவதும், 20 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையாவது வரும் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றுங்கள். இல்லையெனில், 25 ஆண்டுகளாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள்.