/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அரசை கண்டித்துசி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்துசி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 11, 2025 01:16 AM
மத்திய அரசை கண்டித்துசி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ராசிபுரம் நகர ஒன்றிய குழு சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பழைய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் மீனா. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.