/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரத்தில் கொட்டப்படும்குப்பையை எரிப்பதால் அவதி
/
சாலையோரத்தில் கொட்டப்படும்குப்பையை எரிப்பதால் அவதி
சாலையோரத்தில் கொட்டப்படும்குப்பையை எரிப்பதால் அவதி
சாலையோரத்தில் கொட்டப்படும்குப்பையை எரிப்பதால் அவதி
ADDED : ஏப் 11, 2025 01:17 AM
சாலையோரத்தில் கொட்டப்படும்குப்பையை எரிப்பதால் அவதி
வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, அளவாய்ப்பட்டி பஞ்., பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள வெண்ணந்துார் ஓ.சவுதாபுரம் செல்லும் சாலை மற்றும் நரிக்கல் கரடு செல்லும் இணைப்பு சாலை ஓரத்தில், இப்பகுதி மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் அகற்றாமல், அங்கேயே எரிப்பதால், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடுமையாக அவதிப்படுகின்றனர்.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகள், முதியோருக்கு சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, சாலையோரத்தில் தேங்கும் குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.