/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்
/
அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஏப் 15, 2025 01:57 AM
அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்
நாமக்கல்:சட்ட மேதை அம்பேத்கரின், 134வது பிறந்தநாள் விழாவையொட்டி, கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகே கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்து, அம்பேத்கரின் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
* கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து,
அம்பேத்கர் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
* லோக் ஜனசக்தி கட்சி சார்பில், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
எஸ்.சி.,--எஸ்டி., மாவட்ட தலைவர் வஜ்ரவேல் தலைமை வகித்தார். மாநில பொதுச்
செயலாளர் ஆதவன், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
* வெண்ணந்துார், அண்ணாதுரை சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவ படத்திற்கு, ஒன்றிய தலைவர் திவ்யா தலைமையில், மாநில நலத்திட்ட பிரிவு துணை தலைவர் லோகேந்திரன், மாவட்ட செயலாளர் தமிழரசு உள்ளிட்ட நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
* திருச்செங்கோடு நகர, தி.மு.க., அலுவலகத்தில், செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
* குமாரபாளையம் நகர பா.ஜ., சார்பில் நடந்த விழாவில், நகர தலைவர் வாணி தலைமை வகித்து, அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.