/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஏப் 15, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அடுத்த காந்திபுரம் முதல் வீதியில், சாலையில் பிரதான குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாய் வழியாக தான், அப்பகுதி சுற்று வட்டார வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது, கோடைகாலம் என்பதால், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், இதுபோல் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.