ADDED : ஏப் 15, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா விற்ற மூவர் கைது
குமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, காவிரி படித்துறை, காந்தி தெரு, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த,
தம்மண்ணன் வீதி, உடையார்பேட்டை, மேற்கு காலனியை சேர்ந்த ஐயப்பன், 38, சிவா, 23, வசந்தகுமார், 23, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.