தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வெங்கரை அம்மனுக்குசித்திரை கட்டளை பூஜை

வெங்கரை அம்மனுக்குசித்திரை கட்டளை பூஜை

வெங்கரை அம்மனுக்குசித்திரை கட்டளை பூஜை


ADDED : ஏப் 15, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெங்கரை அம்மனுக்குசித்திரை கட்டளை பூஜை

ப.வேலுார்:-ப.வேலுார் அருகே, வெங்கரையில் பிரசித்தி பெற்ற வெங்கரை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று, 46ம் ஆண்டாக வெங்கரை அம்மனுக்கு

சித்திரை கட்டளை பூஜை நடந்தது.

நேற்று காலை, 7:00 மணிக்கு வெங்கரையில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம், பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 11:00 மணிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம் உள்பட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மதியம், 12:00 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு வெங்கரை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us