தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வேளாண் சந்தையில்தேங்காய் விலை உயர்வு

வேளாண் சந்தையில்தேங்காய் விலை உயர்வு

வேளாண் சந்தையில்தேங்காய் விலை உயர்வு


ADDED : ஏப் 16, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளாண் சந்தையில்தேங்காய் விலை உயர்வு

ப.வேலுார்:-ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது. இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 6,120 தேங்காய்களை விவசாயிகள் கொண்டுவந்தனர்.

கடந்த வாரம், அதிகபட்சம் கிலோ, 60.19 ரூபாய், குறைந்தபட்சம், 44.29 ரூபாய், சராசரி, 57.57 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சத்து, 48,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 75.85 ரூபாய், குறைந்தபட்சம், 36.39 ரூபாய், சராசரி, 57 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சத்து, 72,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தேங்காய் விலை சற்று உயர்ந்து விற்பனையானதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us