/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காண்டாமிருக வண்டுபொறி குறித்து விளக்கம்
/
காண்டாமிருக வண்டுபொறி குறித்து விளக்கம்
ADDED : ஏப் 16, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காண்டாமிருக வண்டுபொறி குறித்து விளக்கம்
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட, செம்பாம்பாளையம் கிராமத்தில், தனியார் வேளாண்மை கல்லுாரி மாணவர்கள், கிராமப்புற அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தென்னை மரத்தை அதிகம் தாக்கும் காண்டாமிருக வண்டுகளை மேலாண்மை செய்வது பற்றி செயல்விளக்கம் அளித்தனர். அதில், காண்டாமிருக வண்டு பொறியை பயன்படுத்தும் முறை குறித்தும், தயிர், ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தி காண்டாமிருக வண்டு பொறியை உருவாக்கும் விதம் குறித்து, செயல் விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.

