/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 21, 2025 01:12 AM
ராசிபுரம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, நேற்று காலை வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு, புதுச்சேரி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில்,
கடந்த சில தினங்களாக வக்கீல்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில், ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் வாசுதேவன், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.