/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோர பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
சாலையோர பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2025 01:35 AM
ராசிபுரம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சியில் இருந்து, பட்டணம் டவுன் பஞ்சாயத்திற்கு செல்ல ஜே.ஜே.காலனி வழியாக கிராமத்து சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக தனியார் பள்ளி, கல்லூரியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் செல்கின்றன. அதுமட்டுமின்றி விவசாயிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன.
காக்காவேரியில் இருந்து ஜே.ஜே.காலனிக்கு செல்லும் வழியில், சாலையோரம் பள்ளம் உள்ளது. மண் கொட்டி சரி செய்யாததால் பெரிய பள்ளமாக மாறியுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது, டூவீலர்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கொஞ்சம் சாலையை விட்டு இறங்கினாலும் பள்ளத்தில் விழும் அபாயம்
உள்ளது.
கடந்த வாரம் முகூர்த்த நாட்களில் இவ்வழியாக சென்ற கார்கள் பள்ளத்தில் இறங்கிவிட்டன. எனவே இப்பகுதியில் சாலையோரம் மண் கொட்டி சமன்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.