/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பருவமழை முன்னெச்சரிக்கை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
பருவமழை முன்னெச்சரிக்கை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பருவமழை முன்னெச்சரிக்கை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பருவமழை முன்னெச்சரிக்கை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 19, 2025 01:48 AM
ராசிபுரம்:ராசிபுரம், காட்டூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில், தீயணைப்புத்துறை சார்பில், தென்மேற்கு பருவமழை காலங்களில் ஏற்படும் காற்று, இடி, மின்னல், மழையின்போது, எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்வது, மழை காரணமாக குளம், குட்டை, ஏரி, கிணறு, ஆறு போன்ற இடங்களில் நீர் நிறைந்து இருக்கும் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், பெற்றோர் முன்னிலையில் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும்; நீச்சல் கற்றுக் கொள்ளாமல் நீர் நிலைகளில் இறங்க கூடாது; பெரியவர்கள் துணையின்றி தன்னிச்சையாக நீச்சல் கற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ளக்கூடாது; நீர் நிலைகளில் உயிருக்கு போராடுபவர்களை அன்றாடும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கேன், வாட்டர் கேன், குடம் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி எவ்வாறு அவர்களை மீட்க வேண்டும்; விபத்து ஏற்படும் நேரத்தில், எவ்வாறு தொலைபேசி மூலம் மற்றவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தனர்.
தொடர்ந்து, தீ தடுப்பு ஒத்திகையை, பயிற்சி நிலைய அலுவலர் பலகார ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்து காண்பித்தனர்.