நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், வெண்ணந்துார் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், அரளி சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களாக விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், கோவில் திருவிழாக்கள் இல்லாததால், தேவை குறைந்து விலை சரிந்தது.
இதுகுறித்து, அரளி பூ விவசாயிகள் கூறுகையில், ''ஒரு கிலோ அரளி, 120 ரூபாய் முதல், 140 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். அரளிக்கு உரிய விலை கிடைக்காததால், சில நேரங்களில் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகிறோம். அரளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

