தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பூசாரியிடம் சாட்டைஅடி வாங்கிய பக்தர்கள்

பூசாரியிடம் சாட்டைஅடி வாங்கிய பக்தர்கள்

பூசாரியிடம் சாட்டைஅடி வாங்கிய பக்தர்கள்


ADDED : மார் 27, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம்:வையப்பமலை, மகாமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய வினோத வழிபாடு நடந்தது.

மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவிலில், கடந்த 17ல் கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை 8:00மணிக்கு தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு பக்தர்கள் கோவில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் வினோத வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினர்.

மாலை 3:00 மணிக்கு அக்னிசட்டி, முளைப்பாரி ஊர்வலம், மேளக்கச்சேரி, நையாண்டி, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை 7:30க்கு பொங்கல் வைபவம் நடைபெறுகிறது. மாலை 3:00 மணிக்கு அம்மன் ஊர்வலம், அலகு குத்துதல் நடைபெறும். ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us