தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'ஜூம்பா' நடனமாடி தேர்தல் விழிப்புணர்வு

'ஜூம்பா' நடனமாடி தேர்தல் விழிப்புணர்வு

'ஜூம்பா' நடனமாடி தேர்தல் விழிப்புணர்வு


ADDED : ஏப் 12, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல், தமிழக சட்டசபை தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை எட்டும் வகையில், தினமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதையடுத்து, சமூக நலம், தொழிலாளர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், தமிழக உரிமைகள் திட்டத்தின் முன், கள பணியாளர்கள், கூட்டுறவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், வருவாய், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வலர்கள் என, 500 பேர், ஜூம்பா நடனமாடி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்காமூர்த்தி உற்சாகமாக பங்கேற்று ஜூம்பா நடனமாடி, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். டி.ஆர்.ஓ., சரவணன், டி.ஆர்.ஓ., சாந்தி, வேளாண் இணை இயக்குனர் மல்லிகா, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us