தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம்

திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம்

திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம்


ADDED : மே 10, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்:---சித்திரை திருவோணம் நட்சத்திரத்தையொட்டி, நேற்று ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. சிவன் கோவில்களில் நடராஜருக்கு ஆண்டில், ஆறு நாள் அபிஷேகம் நடக்கும். அவை, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, புரட்டாசி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. இந்த நாட்களில் கோவில்களில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்

அதன்படி, நேற்று சித்திரை நட்சத்திரத்தையொட்டி ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜருக்கு கைலாய வாத்தியம் முழங்க தேவாரம், திருவாசகம் ஓதுதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us