ADDED : மே 12, 2026 05:12 AM
நாமக்கல்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாவட்ட கிளை சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் முருக செல்வராசன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில், மோகனுார், நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், திருச்செங்கோடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் சட்டவிரோதமாக பறிக்கப்படும், 500 ரூபாய் மற்றும் 30 ரூபாய் சிறப்பு படியை தொடர்ந்து வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படும் உதவி கருவூலக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, வரும், 18ல் தர்ணா போராட்டமும், 25ல் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
