ADDED : மே 20, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம்:ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் அதன் அருகே பார் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள பாரில் கடைகள் திறப்பதற்கு முன்பே, சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், நேற்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ராசிபுரம் அடுத்த வேலம்பாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் வினோத், 31, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
