தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தொழிற்சங்கங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆலோசனை

தொழிற்சங்கங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆலோசனை

தொழிற்சங்கங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆலோசனை


ADDED : ஜூன் 19, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:தமிழ் மாநில தொழிற்சங்கங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாமக்கல்-துறையூர் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அதன் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்நிலை, மேல்நிலை கல்விக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நலவாரியத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் ஓய்வூதியத் தொகையை, 1,200 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறக்க நேரிட்டால் ஈமச்சடங்கு நிதியாக, 10 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் குழந்தைசாமி, பொருளாளர் ராஜாராம், துணைத் தலைவர் மோகன்ராஜ், துணை செயலாளர் செல்வகுமார், இணை செயலாளர் பிரபாகரன், மகளிர் அணி தலைவர் சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us