தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணி10 பேர் தேர்வு: பயிற்சிக்கு பின் ஆணை

ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணி10 பேர் தேர்வு: பயிற்சிக்கு பின் ஆணை

ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணி10 பேர் தேர்வு: பயிற்சிக்கு பின் ஆணை


ADDED : ஏப் 09, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணி10 பேர் தேர்வு: பயிற்சிக்கு பின் ஆணை

நாமக்கல்:அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணியிடத்துக்கு, 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பயிற்சி முடித்த பின், பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

'108' அவசரகால ஆம்புலன்சில் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம், நாமக்கல் - மோகனுார் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். சேலம் மண்டல வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ், நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில், காலை, 9:00 முதல், மதியம், 2:00 மணி வரை நடந்த தேர்வு முகாமில், மாவட்டம் முழுவதும் இருந்து, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில், டிரைவர், மூன்று பேர், மருத்துவ உதவியாளர், ஏழு பேர் என, மொத்தம், 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, எழுத்துத்தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும். அதில், தேர்ச்சி பெற்ற டிரைவர்களுக்கு, 10 நாட்களுக்கு சென்னையில், முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். அதேபோல், மருத்துவ உதவியாளர்களுக்கு, சென்னையில், 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us