/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வி.ஏ.ஓ.,க்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
/
வி.ஏ.ஓ.,க்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 29, 2025 01:25 AM
திருச்செங்கோடு,:திருச்செங்கோடு தாலுகாவில், 74 வி.ஏ.ஓ.,க்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், தாலுகா அலுவலகம் முன், நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.
அதில், திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில், தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் கவிதா; இவர், கடந்த ஏழு ஆண்டுகளாக திருச்செங்கோடு தாலுகாவிற்குள்ளேயே பணியாற்றி வருகிறார்.
இதனால், வி.ஏ.ஓ.,க்களை மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். எங்களால் தொடர்ந்து பணி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

