/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் திருடிய 2 பேர் கைது11 வாகனங்கள் மீட்பு
/
டூவீலர் திருடிய 2 பேர் கைது11 வாகனங்கள் மீட்பு
ADDED : பிப் 19, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலர் திருடிய 2 பேர் கைது11 வாகனங்கள் மீட்பு
ப.வேலுார்:-ப.வேலுார் அருகே, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் வந்த, கரூர் மாவட்டம், நெரூர் அருகே பழையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் யுவராஜ், 30, அதே பகுதியை சேர்ந்த தாமஸ் மகன் பிரனேஷ், 20, ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு பகுதிகளில் டூவீலர்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, 11 டூவீலர்களை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.