தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வேளாண் அறிவியல் நிலையத்தில்21ல் அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில்21ல் அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில்21ல் அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி


ADDED : பிப் 19, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளாண் அறிவியல் நிலையத்தில்21ல் அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்:'வரும், 21ல், 'நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 21 காலை, 10:00 மணிக்கு, 'நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில், மீன் பண்ணைக்குட்டை அமைக்க இடம் தேர்வு, மண், நீர் பரிசோதனை, பண்ணைக்குட்டை அமைத்தல், மீன்குஞ்சு உற்பத்தி, தேர்வு செய்தல், உணவு, நோய் மேலாண் முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள், சந்தைப்படுத்துதல் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது.

மேலும், இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் நாமக்கல் மாவட்ட மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை தரப்படும். வேலையில்லாத பட்டதாரிகள், விவசாயிகள், இல்லத்தரசிகள், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் முதுநிலை கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தை, 04286-266345, 266650, 7358594841 ஆகிய தொலைபேசி, மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us