/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏலத்தொகை அதிகம்: 25 கடைகளை திறக்க தயக்கம்மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு
/
ஏலத்தொகை அதிகம்: 25 கடைகளை திறக்க தயக்கம்மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு
ஏலத்தொகை அதிகம்: 25 கடைகளை திறக்க தயக்கம்மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு
ஏலத்தொகை அதிகம்: 25 கடைகளை திறக்க தயக்கம்மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு
ADDED : மார் 03, 2025 01:37 AM
ஏலத்தொகை அதிகம்: 25 கடைகளை திறக்க தயக்கம்மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு
நாமக்கல்:புதிய பஸ் ஸ்டாண்டில் ஏலம் எடுத்த கடைகள், திறக்காமல் பூட்டி கிடக்கின்றன. வாடகை அதிகம் என்பதால், குத்தகைதாரர்கள் கடைகளை திறந்து விற்பனை செய்ய தயக்கம் காட்டுகின்றனர். அதனால், ஏலம் எடுத்த கடைகளை, நாமக்கல் மாநகராட்சியிடம் திரும்ப ஒப்படைக்க குத்தகைதாரர்கள் முடிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில், 20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, 2024 நவ., 22ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பஸ் ஸ்டாண்டில், 57 கடைகள், இரண்டு உணவகங்கள், மூன்று கட்டண கழிப்பிடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றிற்கான பொது ஏலம், 2024 அக்., 4ல், 33 கடைகள், இரண்டு ஓட்டல்களுக்கு நடந்தது. தொடர்ந்து, 28ல், 22 கடைகளுக்கு ஏலம் நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது.
இந்த கடைகள் குறைந்தபட்சம், 16,000 ரூபாய், அதிக பட்சம், 41,500 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள், அடுத்தடுத்து கடைகளை திறந்து விற்பனை செய்து, முழுமையாக திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கு மாதம் முடிந்த நிலையிலும், இன்னும் ஏலம் எடுத்த, 20க்கும் மேற்பட்ட கடைகள் திறக்காமல் பூட்டிக்கிடக்கிறது. அவ்வாறு திறக்கப்பட்ட கடைகளுக்கும், போதிய வருவாய் இன்றி, விழிபிதுங்கி உள்ளனர். மேலும், பஸ்சிற்கு வரும் பயணிகளும், கடைகள் திறக்காததால், பொருட்களை வாங்க முடியாமல்
தவிக்கின்றனர்.
இதுகுறித்து, கடை ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள் சிலர் கூறியதாவது: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் எடுக்கப்பட்ட கடைகள் குறைந்த பட்சம், 16,000 ரூபாய், அதிக பட்சம், 41,500 ரூபாய். இந்த வாடகையை மாதந்தோறும் தவறாமல் செலுத்த வேண்டும். ஆனால், பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதால்,
எப்படி கடையை திறந்து வியாபாரம் செய்ய முடியும் என தெரியவில்லை. புதிய பஸ் ஸ்டாண்டில் வியாபாரம் நன்றாக நடக்கும் என்ற ஆர்வத்தில், போட்டி போட்டு அதிக தொகைக்கு ஏலம் எடுத்துவிட்டோம். ஒரு ஆண்டுக்கான மாத வாடகையும், ஒரு ஆண்டுக்கான வைப்பு தொகையும் செலுத்திவிட்டோம்.
ஆனால், தற்போது, திறந்துள்ள கடைகளில் வியாபாரம் படுத்துவிட்டதால், போட்ட முதலை எடுக்க முடியாமல், கடைக்காரர்கள் திணறுகின்றனர். பாதி கடைகள் திறக்காமல் பூட்டிக்கிடக்கின்றன. அதனால், ஏலத்தொகையை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், வேறு வழியின்றி, இரண்டொரு மாதத்தில், கடைகளை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.