/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செல்வலிங்கேஸ்வரர் கோவிலில்26ல் மகா சிவராத்திரி விழா
/
செல்வலிங்கேஸ்வரர் கோவிலில்26ல் மகா சிவராத்திரி விழா
செல்வலிங்கேஸ்வரர் கோவிலில்26ல் மகா சிவராத்திரி விழா
செல்வலிங்கேஸ்வரர் கோவிலில்26ல் மகா சிவராத்திரி விழா
ADDED : பிப் 20, 2025 01:30 AM
செல்வலிங்கேஸ்வரர் கோவிலில்26ல் மகா சிவராத்திரி விழா
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, அக்கரைப்பட்டி வாய்க்கால் கரையில் பிரசித்திபெற்ற செல்வநாயகி அம்மன் உடனுறை செல்வலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வரும், 26ல், மஹா சிவராத்திரி விழா நடக்க இருப்பதையொட்டி, 23 மாலை, 6:00 மணிக்கு, காப்பு கட்டுதலுடன் விழா தொடங்குகிறது. 25 மாலை, 4:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா நடைபெறும். 26 மாலை, 3:00 மணிக்கு, திருமணிமுத்தாற்றில் இருந்து தீர்த்தக்குடம் அழைத்து வரப்படும்.
மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 3:00 மணி வரை, நான்குகால பூஜை நடைபெறும். 27 காலை, 5:00 மணிக்கு, பொங்கல் வைபவத்தை தொடர்ந்து, சுவாமி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.