தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கள்ளிப்பழம் சாகுபடி தொழில்நுட்பம்: 28ல் இலவச பயிற்சி

கள்ளிப்பழம் சாகுபடி தொழில்நுட்பம்: 28ல் இலவச பயிற்சி

கள்ளிப்பழம் சாகுபடி தொழில்நுட்பம்: 28ல் இலவச பயிற்சி


ADDED : மார் 18, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளிப்பழம் சாகுபடி தொழில்நுட்பம்: 28ல் இலவச பயிற்சி

மோகனுார்:'வரும், 28ல், 'கள்ளிப்பழம் சாகுபடி தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 28 காலை, 10:00 மணிக்கு, 'கள்ளிப்பழம் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் பூச்சி, நோய் மேலாண் முறைகள்' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடக்கிறது. இப்பயிற்சியில், கள்ளிப்பழ சாகுபடி குறிப்புகள், உரம், நீர் மேலாண்மை, செடியை தாக்கும் பூச்சிகள், நோய்களை கட்டுப்

படுத்தும் முறைகள், வளர்ச்சியூக்கிகள், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்படும்.

அதில், விவசாயிகள், விவசாயம் கலந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் விருப்பம்

உள்ளவர்கள் பங்கேற்கலாம்.ஆர்வம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது, 04286-266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்ற தொலைபேசி, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு, தங்களது பெயர்களை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us