/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மூதாட்டி கொலை வழக்கில் 4வதாக பெண் ஒருவர் கைது
/
மூதாட்டி கொலை வழக்கில் 4வதாக பெண் ஒருவர் கைது
ADDED : ஆக 08, 2024 06:32 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர், 20 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று விட்டார். வீட்டை நாகரத்தினம், 65, என்ற மூதாட்டிக்கு போகி-யத்திற்கு விட்டிருந்தார். கணவரை இழந்த நாகரத்தினம் தனியாக வசித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் வீட்டை காலி செய்ய கேட்டபோது, நாகரத்தினம் மற்றும் பொன்னுசாமி தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், நாகரத்தினம் ஐயப்பன் நகரில் உள்ள வீட்டில் இறந்து கிடந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்-தினர். அதில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த காதக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த முத்து மகன் சதீஷ், 31, சேலம் மாவட்டம், கொளத்துார், ராமாயி அம்மாள் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் ராமு, 24, ஆகிய இருவரும் பணத்திற்-காக நாகரத்தினத்தை கொலை செய்தது தெரிந்தது. கூலிப்ப-டையை சேர்ந்த சதீஷ், ராமு மற்றும் கொலைக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் பொன்னுசாமி ஆகியோரை, நாமகிரிப்-பேட்டை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம், சூலுாரில் தலைமறைவாக இருந்த சக்திவேல் மனைவி ராதா, 37, நேற்று கைது செய்யப்-பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். மேலும், ஒருவரை தேடி வரு-கின்றனர்.