தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொல்லிமலை மலைகிராமத்தில் 94.69 சதவீதம் ஓட்டுப்பதிவு

கொல்லிமலை மலைகிராமத்தில் 94.69 சதவீதம் ஓட்டுப்பதிவு

கொல்லிமலை மலைகிராமத்தில் 94.69 சதவீதம் ஓட்டுப்பதிவு


ADDED : ஏப் 23, 2024 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதியில் கொல்லிமலை கிராமத்தில் அதிகபட்சமாக, 94.69 சதவீதம்

ஓட்டுப்பதிவாகியுள்ளது.

சேந்தமங்கலம் தொகுதியில் எருமப்பட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலை ஆகிய ஒன்றியங்களும் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் சில பகுதிகளும் உள்ளன. இவற்றில், 284 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 78.37 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது. நாமக்கல் லோக்சபாவில் பதிவான ஓட்டு சதவீதத்தில் இது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், கொல்லிமலை கிராம பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பெரும்பாலும், 88 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, குண்டனிநாடு ஓட்டுச்சாவடி எண், 55ல், 94.69 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது. இதுதான் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு. இரண்டாவதாக, கொல்லிமலை குண்டூர் நாடு, 56வது ஓட்டுச்சாவடியில், 91.18 சதவீதமும், பெரக்கரநாடு, 41வது ஓட்டுச்சாவடியில், 90.51 சதவீதமும் பதிவாகியுள்ளது. மலை கிராம மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டுகளை பதிவு செய்து முன்மாதிரியாக மாறியுள்ளனர். எருமப்பட்டி

ஓட்டுச்சாவடி எண், 211ல் குறைந்தபட்சமாக, 61.40 சதவீதம் பதிவாகியிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us