/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மர்ம விலங்கால் ஒரு ஆடு பலி; ஒன்று மாயம் சென்னிமலை அருகே -சிறுத்தை அச்சம்

ADDED : பிப் 25, 2025 04:43 AM
சென்னிமலை: சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசு, குட்டக்காட்டை சேர்ந்தவர் குமாரசாமி, 58; விவசாயியான இவர் சென்னிமலை தெற்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது தோட்டத்தில், பட்டி அமைத்து, 30-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்தார்.
இதில் கடந்த ஆண்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆடாக எட்டு ஆடுகள் காணாமல் போயின. சிறுத்தையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் கடந்த ஆண்டு அக்.,ல், பட்டி அருகில் கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று காலை பட்டிக்கு குமாரசாமி சென்று பார்த்த போது ஒரு ஆடு காணாமல் போனதும், மற்றொரு ஆடு கழுத்து கடிபட்ட நிலையில் இறந்தும் கிடந்தது. தகவலின்படி சென்ற சென்னி-மலை வனத்துறையினர், கால் தடயங்களை ஆய்வு செய்தனர். கடந்த ஆண்டு அக்.,ல் பொருத்திய கேமராவில் சிறுத்தை நட-மாட்டம் எதுவும் பதிவாகாத நிலையில், வனத்துறையினர் கேம-ராவை எடுத்து சென்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு ஆடு பலி-யான நிலையில், ஒரு ஆடு மாயமாகியுள்ளது. இதனால் சிறுத்தை மீண்டும் வந்திருக்கலாம் என்று, அப்பகுதி மக்கள் அச்சம் தெரி-வித்துள்ளனர்.