/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண் டாக்டர் கொலை நீதி கேட்டு ஊர்வலம்
/
பெண் டாக்டர் கொலை நீதி கேட்டு ஊர்வலம்
ADDED : ஆக 24, 2024 07:15 AM
திருச்செங்கோடு: கோல்கட்டாவில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு, திருச்செங்-கோட்டில், ரோட்டரி இன்னர் வீல் சங்கம் சார்பில் கண்டன ஊர்-வலம் நடந்தது. நகராட்சி தலைவர் நளினி, துவக்கி வைத்தார்.
ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணசிலை அருகே இருந்து துவங்கி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக சென்று, மீண்டும் அண்ணா சிலை அருகே நிறைவ-டைந்தது. இதில், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி வேண்டும். பாலியல் வன்கொடு-மைகளை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நகராட்சி கவுன்சிலர்கள், கல்லுாரி மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.