/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., வக்கீல் அணி ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., வக்கீல் அணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2024 05:55 AM
நாமக்கல்: மத்திய
அரசு புதிதாக கொண்டு வந்துள்ள, மூன்று கிரிமினல் சட்-டங்களை திரும்ப பெற
வலியுறுத்தி, நாமக்கல்லில், தி.மு.க., வக்-கீல்கள் சங்கத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிரிமினல் சட்டங்களான, இந்திய தண்டனை
சட்டம், 'பாரதிய நியாய சன்ஹிதா' (பி.என்.எஸ்.,), இந்திய குற்றவியல் விசாரணை
முறைச்சட்டம், 'பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா' (பி.என்.எஸ்.எஸ்.,),
இந்திய சாட்சிய சட்டம், 'பாரதிய சாக் ஷய அதிநியம்' (பி.எஸ்.ஏ.,) என, பெயர்
மாற்றம் செய்யப்பட்டு, சட்-டப்பிரிவுகளில் பல்வேறு திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு, கடந்த, 1 முதல், நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த
புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் ஒருங்கி-ணைந்த
நீதிமன்றம் முன், மாவட்ட தி.மு.க., வக்கீல்கள் சார்பில், அரசியலமைப்பு
சட்டத்திற்கு எதிரான, திருத்தப்பட்ட மூன்று சட்-டங்களை, மத்திய அரசு
திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., வக்கீல் அணி
மாவட்ட துணை அமைப்பாளர்கள் வடிவேல், அகிலன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தி.மு.க., சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன் முன்னிலை
வகித்தார். மூத்த வக்கீல் ரமேஷ், மாதேஸ்வரன், முத்துக்குமார் உள்பட பலர்
பங்கேற்று, 'புதிய சட்டங்களை வாபஸ் பெறக்-கோரி' மத்திய அரசை வலியுறுத்தி
கோஷமிட்டனர்.