/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுாரில் துணை மின் நிலையம் அமைக்க தொழில் நிறுவனங்கள், மக்கள் எதிர்பார்ப்பு
/
மோகனுாரில் துணை மின் நிலையம் அமைக்க தொழில் நிறுவனங்கள், மக்கள் எதிர்பார்ப்பு
மோகனுாரில் துணை மின் நிலையம் அமைக்க தொழில் நிறுவனங்கள், மக்கள் எதிர்பார்ப்பு
மோகனுாரில் துணை மின் நிலையம் அமைக்க தொழில் நிறுவனங்கள், மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 22, 2024 01:56 AM
மோகனுார், ஆக. 22-
'மோகனுாரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொமரிபாளையம், ஒருவந்துார், மோகனுாரில் ஒரு பகுதிக்கும், வளையப்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து தான் மின் வினியோகம் செய்யப்படுகிறது. 20 கி.மீ., தொலைவிற்கு மின் வினியோகம் இருப்பதால், இந்த வழித்தடத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.
இப்பகுதியில், தென்னை உள்ளிட்ட மரங்கள் அதிகம் உள்ளன. இதனால், 20 கி.மீ., தொலைவில் இருந்து வரும்போது, அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. ஒருவந்துாரில் குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று பம்புகள் உள்ளதால், தனியாக குடிநீர் பயன்பாட்டிற்காக மின்வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது போதுமானதாக இல்லை.
இப்பகுதியில், ஏழு தென்னை நார் தொழிற்சாலை, கோழித்தீவன அரவை மிஷின், கொசுவலை உற்பத்தி, அரிசி ஆலைகள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதை நம்பி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், தொழிற்சாலையில் மின் உதிரி பாகங்கள் சேதமடைவதுடன், தொழிலும் முடங்கி விடுகிறது. கூலித்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மோகனுாரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தென்னை நார் கழிவு ஏற்றுமதியாளர்கள் சார்பில், துணை மின் நிலையம் அமைக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.