/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்வதேச இளைஞர் தினம் விழிப்புணர்வு மாரத்தான்
/
சர்வதேச இளைஞர் தினம் விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : செப் 02, 2024 03:13 AM
நாமக்கல்: சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, நேற்று கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்-பாட்டு அலுவலர் பூங்கொடி தலைமை வகித்தார்.எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்ப-டுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த மாரத்தானில், 150 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்
தொடங்கிய மாரத்தான் ஓட்டம், மோகனுார் சாலையில் உள்ள தனியார் கல்லுாரி முன் நிறைவடைந்தது.