/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க லாரி உரிமையாளர் சம்மேளனம் கோரிக்கை

ADDED : செப் 08, 2024 07:45 AM
நாமக்கல்: 'திருட்டை தடுக்க போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் உள்ள மாநில லாரி உரிமையா-ளர்கள் சம்மேளன அலுவலகத்தில், சம்மேளன நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சம்மேளன தலைவர் தனராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் தாமு (எ) தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில லாரி உரிமையாளர்கள்
சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழகம்
முழுவதும் சரக்கு ஏற்றி செல்லும் லாரிகளில் உள்ள பொருட்கள் வழிப்பறி கொள்ளையர்களால் திருடப்படுகிறது. இரவு
நேரங்களில் நடக்கும் இந்த சம்பவங்களால், லாரி உரிமை-யாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால்,
திருட்டை தடுக்க போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளை
மண்டலம் வாரியாக சம்மேளன நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வது என்பன உள்பட
பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.துணை தலைவர்கள் சின்னுசாமி, முருகேசன், சுப்பு, சாத்தையா, இணை செயலாளர்கள் சுப்ரமணி, செல்வராஜா உள்பட
பலர் பங்கேற்றனர்.