/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆனி பட்டமாக சின்ன வெங்காயம் நடவு
/
ஆனி பட்டமாக சின்ன வெங்காயம் நடவு
ADDED : ஜூலை 06, 2024 05:54 AM
எருமப்பட்டி : எருமப்பட்டி யூனியன், முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி, பவித்-திரம், நவலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக-ளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர்.
இந்தாண்டு, கடந்த, ஆறு மாதத்திற்கு முன் வரை எருமப்பட்டி பகுதியில் போதிய மழை இல்லாததால் மாசி பட்டத்தில் மிக குறைந்த அளவிலான விவசாயிகள் சின்ன வெங்காம் நடவு செய்-திருந்தனர். கடந்த மாதம் பெய்த கன மழையால், தற்போது ஆனி பட்டமாக பல்வேறு பகுதியில் சின்ன வெங்காயம் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து, விவசாயி ராமசாமி கூறுகையில், ''எருமப்பட்டி பகு-தியில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஒரு சில நேரங்களில் சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை இல்லா-ததால், பட்டரைகள் அமைத்து சேமித்து வைத்து விலை ஏற்-றத்தின் போது விற்பனை செய்கிறோம்.
ஆனால், இந்தாண்டு போதிய மழை இல்லாததால் சின்ன வெங்-காயம் நடவு செய்வது குறைந்திருந்தது. கடந்த மாதம் பெய்த மழையால் ஆனி பட்டமாக சின்ன வெங்காயம் நடவு பணியில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.