ADDED : ஆக 26, 2024 02:32 AM
மோகனுார்: கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், நாமக்கல், சேலம் மாவட்-டங்களில் உள்ள பழமையான கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, மோகனுார் தாலுகா, ஆரியூர் பாமா ருக்மணி சமேத நந்தகோபால கிருஷ்ணன் கோவிலில், உழவாரப்பணி நேற்று நடந்தது. ஆரியூர் நிலக்கிழார் செல்வமணி தலைமை வகித்தார். பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அருணாசலம், ஆரியூர் பஞ்., முன்னாள் தலைவர் ராஜாகண்ணன் ஆகியோர், மரக்கன்றுகளை நட்டனர். நாமக்கல் கிரீன்பார்க் கல்வி நிறுவன இயக்குனர் குருவாயூரப்பன், கோவில் தல வர-லாறு குறித்து பேசினார்.
தொடர்ந்து, கோவிலை சுற்றிலும், பல்வேறு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மோகனுார் சர்க்கரை ஆலை மருத்துவர் ஜனார்த்தனன், நாமக்கல் கூட்டுறவு வீட்டு வசதி வாரிய செயலாளர் முருகேசன், முக்கிய நிர்வாகிகள், ஆன்மிக அன்பர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.