ADDED : ஜூலை 22, 2024 08:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம் ; மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலையில் மலைக்குன்றின் மீது பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆடி மாத பவுர்ணமியையொட்டி, இக்கோவிலில் ஏராள-மான பக்தர்கள் மலையைசுற்றி கிரிவலம் வந்-தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்-டது.
நேற்று மதியம், 12:00 மணியளவில், கொங்-கணசித்தர் குகையில் பவுர்மணி சிறப்பு பூஜை நடந்தது. கிரிவல பாதையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் கொங்கண சித்தர் குகை வரையில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் எறியாததால் பக்தர்கள் இருட்டில் சிரமப்பட்டு சென்றனர். பஞ்சாயத்து அதிகாரிகள், மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.