ADDED : ஆக 01, 2024 02:01 AM
நாமகிரிப்பேட்டை: பீஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் ரஞ்சித், 25; இவரது மனைவி ரிங்குதேவி, 19. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது, நாமகிரிப்பேட்டை யூனியன், ஜேடர்பாளையம் கிராமத்தில் தங்கி, தேங்காய் குடோனில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பி-ணியாக இருந்த ரிங்குதேவிக்கு, நேற்று காலை, 5:45 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. '108' அவசரகால ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த ஆம்புலன்ஸ், ரிங்குதேவியை ஏற்றிக்கொண்டு, மருத்-துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, ரிங்குதே-விக்கு பிரசவ வலி அதிகமானதால், ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்திவிட்டு உள்ளே இருந்த நர்சு ரேகா, ரிங்கு தேவிக்கு பிர-சவம் பார்த்தார். சிறிது நேரத்தில் ரிங்கு தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து தாய், சேய் இருவரையும் நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தற்போது, தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த ரேகாவை, டாக்டர்கள் பாராட்டினர்.