/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் பா.ஜ.,வினர் தெருமுனை பிரசாரம்
/
ராசிபுரம் பா.ஜ.,வினர் தெருமுனை பிரசாரம்
ADDED : ஜூலை 22, 2024 08:10 AM
ராசிபுரம், ; தமிழகம் முழுதும், பா.ஜ., நிர்வாகிகள் தெரு-முனை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராசிபுரம் நகர பா.ஜ., சார்பில், நேற்று பழைய பஸ் ஸ்டாண்டில் தெருமுனை பிரசாரம் நடந்தது. பா.ஜ., நகர தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இளங்-கோவன், மத்திய நலத்திட்ட பிரிவின் மாவட்ட தலைவர் அசோக்குமார், கல்வியாளர் பிரிவு மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்-டனர்.கள்ளச்சாராய சாவால் ஏற்படும் சமூக மாற்றம், பின் விளைவுகள் ஆகியவை குறித்து விளக்க-மாக பேசினர். மேலும், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை ஆளுங்கட்சியினர் நன்மைக்காக புதிய இடத்திற்கு மாற்றுவதாகவும் குற்றஞ்சாட்-டினர். பொதுமக்களின் பிரச்னைக்கு, பா.ஜ., எப்-போதும் முதலாவதாக குரல் கொடுக்கும் என்று கூறினர். இந்நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.