தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தீப்பிடித்து எரிந்த மரம் அகற்ற கோரிக்கை

தீப்பிடித்து எரிந்த மரம் அகற்ற கோரிக்கை

தீப்பிடித்து எரிந்த மரம் அகற்ற கோரிக்கை


ADDED : ஜூலை 17, 2024 09:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 09:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மோகனுார் : மோகனுார் தாலுகா, ஒருவந்துார் பஞ்., ஒரு-வந்துார் புதுார் அருகே, சாலையோரம், 40 அடி உயர புளிய மரம் உள்ளது. நேற்று மதியம், 1:00 மணிக்கு, இந்த புளிய மரத்தின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. பொதுமக்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீப்பிடித்த புளிய மரத்தில் இருந்து, 15 அடி துாரத்தில் டிரான்ஸ்-பார்மர் அமைந்துள்ளது. இதனால், தகவலறிந்த மின்வாரியத்துறையினர், ஒயர்களை கழட்டி அப்-புறப்படுத்தினர். நாமக்கல் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீ மேலும் பர-வாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மரத்தின் அடிப்பகுதி நன்றாக எரிந்து விட்டதால், மரம் எந்நேரமும் முறிந்து விழும்? அபாயம் உள்-ளது. அதனால், புளிய மரத்தை அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us