/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் மீனவர்கள் உதவியுடன் மீட்பு
/
வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் மீனவர்கள் உதவியுடன் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் மீனவர்கள் உதவியுடன் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் மீனவர்கள் உதவியுடன் மீட்பு
ADDED : ஆக 01, 2024 02:02 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, நாட்டாகவுண்டம்பாளையம் பகு-தியை சேர்ந்தவர் சதாசிவம், 38; இவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு ஆற்றில் இறங்கி உள்ளார். அப்போது வெள்ளப்பெ-ருக்கில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். இதனை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, வெப்படை தீயணைப்பு வீரர், ஜனதா நகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மற்-றொரு தீயணைப்பு வீரருக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் பரிசலில் ஆற்றுப்பகுதிக்கு சென்றனர். அங்கு தத்தளித்துக்கொண்டிருந்த சதாசிவத்தை மீட்டு, பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். பின், பள்ளிப்பாளையம் அரசு மருத்-துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சதாசிவத்திற்கு நீச்சல் தெரிந்ததால், 2 கி.மீ., துாரம் ஆற்றில் தத்தளித்தபடியே வந்-துள்ளார். நீச்சல் தெரியாதவர்கள் சிக்கியிருந்தால் உயிர்சேதம் ஏற்-பட்டிருக்கும் என, மீனவர்கள், தீயணைப்பு வீரர்கள் தெரிவித்-தனர்.