/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்
/
பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 03, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், கூத்தமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு, கடந்த, 2022ம் ஆண்டு முதல் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்தது.
தற்போது, பள்ளி மேலாண்மை குழுவின் பதவிக்காலம் முடியும் நிலையில், கல்வி துறையின் மாநில திட்ட இயக்குனர் வழிகாட்டுதல்படி, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்வதற்கான பெற்றோர் அறிமுக கூட்டம் தலைமை ஆசிரியர் தேசிங்கன் தலைமையில் நடந்தது. இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா, மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.