/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'ஊரக கண்டுபிடிப்பாளர்' விருது ஆக., 10க்குள் விண்ணப்பிக்கலாம்
/
'ஊரக கண்டுபிடிப்பாளர்' விருது ஆக., 10க்குள் விண்ணப்பிக்கலாம்
'ஊரக கண்டுபிடிப்பாளர்' விருது ஆக., 10க்குள் விண்ணப்பிக்கலாம்
'ஊரக கண்டுபிடிப்பாளர்' விருது ஆக., 10க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 02, 2024 06:51 AM
நாமக்கல் :' 'ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து, வரும் ஆக., 10க்கு முன் விண்ணப்பங்கள் வரவேற்கப்ப-டுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின், உயர்கல்வித்துறை அறிவியல் நகரம் மூலம், 2023-24ம் ஆண்டிற்கான, 'ஊரக கண்டுபிடிப்பாளர்' விருதுகளுக்-கான விண்ணப்ப படிவங்கள், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல் குறிப்புகள், 'ஊரக கண்டுபிடிப்-பாளர்' விருது தொடர்பான அரசாணை மற்றும் தகுதியுள்ள பய-னாளிகள் விண்ணப்பிக்க தனியே www.sciencecitychennai.in மற்றும் www.namakkal.nic.in என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட இணையதளத்தை பார்வையிட்டு, ஊரக கண்டுபி-டிப்பாளர்களின் விருதுகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்-பங்கள், 'நாமக்கல் கலெக்டர், கலெக்டர் அலுவலகம், நாமக்கல்' என்ற முகவரிக்கு, வரும் ஆக., 10க்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.