/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
/
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
ADDED : செப் 07, 2024 07:52 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம், திண்டலை சேர்ந்த ராஜசேகரன் மகன் வினோத், 27. இவர், சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசல் பகுதியில் வசிக்கும் தன் பாட்டியை பார்க்க, நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். ராசிபுரம் அருகே, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, அணைப்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
காரை ஓட்டிய வினோத், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கூகுள் மேப்பில், வழியை பார்த்துக்கொண்டே கார் ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.